இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் ஆடி மாதம் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02-55 வரை பூசம் பின்பு ஆயில்யம்.
திதி: இன்று மாலை 5-32 வரை அமாவாசை பின்பு பிரதமை
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 07.45 - 08.45
நல்ல நேரம் மாலை: 03.15 - 4.15
ராகு காலம் மாலை: 04.30 - 6.00
எமகண்டம் மாலை: 12.00 - 1.30
குளிகை மாலை: 03.00 - 4.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை 1.30 - 2.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டம்: அனுஷம், கேட்டை
இன்றைய ராசிபலன்:
மேஷம்
பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். பணவரவு அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதியவர்களின் நட்பு பலக்கும். வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரிஷபம்
வெளிநாட்டில் வசிப்பவர்கள் உங்களது தொழிலுக்கு உதவிபுரிவர். வீட்டைப் பற்றியும் கவனத்தில் கொள்வது நல்லது. பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். பயணங்களின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மிதுனம்
மாணவர்கள் நன்கு படிப்பர். நினைத்த காரியங்கள் பலதில் ஒன்று முடியும். மனம் ஆன்மீகத்தில் நாடும். தங்களின் பிள்ளைகளின் சுபகாரியம் சம்பந்தமாக வெளியூருக்குச் சென்று ஆடை, அணிமணிகள் வாங்கிவருவீர்கள். உடற்பயிற்சி அவசியம் என உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம்
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கதவை தட்டும். கமிஷன் மற்றும் இரும்பு தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் தேவை. பொறுமை அவசியம். மார்கெட்டிங்பிரிவினர்கள் இலக்குகளை எட்டிவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்
சிம்மம்
வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். பணம் பலவழிகளில் வரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பங்குச் சந்தை பலன் தரும். தம்பதிகளின் ஒற்றுமைக்கு குறையிருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கன்னி
பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். பல வருடங்களாக பிள்ளைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பார்த்த ஒரு தொகை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
துலாம்
தீர்க்கயாத்திரை மேற்கொண்டு மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உடல் நலம் சிறக்கும். கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
விருச்சிகம்
அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் மற்றும் சங்கடங்கள் தோன்றலாம். மிகவும் கவனம் தேவை. இறைவனை வழிப்பட்டு காரியத்தை துவங்கவும். இன்று காரியதடைகள் ஏற்படும். காரணம் சந்திராஷ்டமம் உள்ளதால் மிகவும் கவனம் தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
தனுசு
மாமியார் தொல்லை அகலும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். மளிகைக் கடை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய உத்யோகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மகரம்
தம்பதிகளிடையே அன்பு பலமாகும். பெண்களுக்கு கை, கால் வலி குறைந்து, ஆரோக்கியம் சிறக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு பலிக்கும். பிரபலமானவர்களால் உதவி உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கும்பம்
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை நீங்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். பணவரவில் தாமதம் இல்லை. வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மீனம்
விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். ஆன் லைன் மற்றும் பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். குடும்பத் தலைவிகள் தங்களுடைய அனாவசியமான ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்திற்கு மட்டும் செலவு செய்யப்பாருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்