ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை அணி ? : கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை..!!
பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க கொல்கத்தா இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
மும்பை,
ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் 11 முதல் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் எஞ்சி இருக்கும் போட்டிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானதாகும்.
இந்த நிலையில் மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள 56வது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அதே நேரத்தில் கொல்கத்தா அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாகும். பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க கொல்கத்தா அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது.