குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆம் ஆத்மியில் சேர முடிவு..!!
குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆம் ஆத்மியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆமதாபாத்,
குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் தொழில்துறை பிரிவின் முன்னாள் அகில இந்திய தலைவருமான கைலாஷ் காத்வி டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரசை சேர்ந்த சுமார் 10 நிர்வாகிகள் மற்றும் 300 தொண்டர்களுடன் ஆம் ஆத்மியில் இணைய இருப்பதாக கூறினார்.
குஜராத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் தலைமையிடம் போதிய உறுதிப்பாடு இல்லை என குற்றம் சாட்டியுள்ள காத்வி, இது கட்சியின் வளர்ச்சிக்காக அடிமட்டத்தில் உழைக்கும் தொண்டர்களிடம் விரக்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் விலக இருக்கும் தகவல் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.