“உனக்கு பைத்தியமா? நீங்கள் என்ன முட்டாளா?..” நடுவரிடம் கூச்சலிட்ட முன்னணி வீரர்!

அவருக்கு 12 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்கம் விதித்துள்ளது.

Update: 2022-01-29 10:35 GMT
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று  நடந்த அரையிறுதி போட்டியில் உலகின் 2-ம் நிலை டென்னிஸ் வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா)  மற்றும்  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மோதினர். 

இந்த ஆட்டத்தில் 7-6, 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில்  டேனியல் மெட்வெடேவ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்த நிலையில், இந்த போட்டியின் போது மெட்விடேவ் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக அவருக்கு 12 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அபராதமாக ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்கம் விதித்துள்ளது. அவர் டென்னிஸ் விளையாட்டு நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள மெட்விடேவ், நடுவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டது கண்டனத்திற்கு உள்ளானது. அவர் அரையிறுதி போட்டியின் போது  நாற்காலி நடுவர் ஜாம் கேம்பிஸ்டலிடம் கூச்சல் போட்டுள்ளார். 

நடுவரை நோக்கி , “உனக்கு பைத்தியமா? நீங்கள் என்ன முட்டாளா?..  நீங்கள் என்ன முட்டாளா?...  அரையிறுதியில் எப்படி இவ்வளவு மோசமாக இருக்க முடிகிறது” என்று கூச்சலிட்டார்.

ஆனால், போட்டி முடிவடைந்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொண்டார்.

தொடர்ந்து, நாளை நடக்க உள்ள இறுதிப் போட்டியில், டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலையில் உள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடாலை எதிர்கொள்கிறார்  ரஷியாவின் டேனியல்  மெட்வெடேவ்.

மேலும் செய்திகள்