விம்பிள்டன் டென்னிஸ்: கோகோ காப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கோகோ காப் 3-வது சுற்று ஆட்டத்தில் சோனாய் கர்தல் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Update: 2024-07-04 09:17 GMT

image courtesy: AFP

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனை கோகோ காப் ( அமெரிக்கா), அன்கா டோதோனியுடன் (ருமேனியா) மோதினார்.

இதில் ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் அன்கா டோதோனியை வீழ்த்தி, 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் சோனாய் கர்தல் உடன் மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்