அமெரிக்க ஓபன் டென்னிஸ்; கரோலினா முச்சோவா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்...!!

கரோலினா முச்சோவா காலிறுதி சுற்றில் சொரானா சிர்ஸ்டியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.;

Update:2023-09-06 15:45 IST

image courtesy;AFP

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் நாட்டை சேர்ந்த கரோலினா முச்சோவா ரூமெனிய நாட்டை சேர்ந்த சொரானா சிர்ஸ்டியா உடன் மோதினார்.

இதில் முச்சோவா 6-0 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் முதன் முறையாக அமெரிக்க ஓபன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்