அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு தகுதி

ஸ்வியாடெக் 4-வது சுற்றில் லியுட்மிலா சாம்சோனோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Update: 2024-09-01 08:16 GMT

நியூயார்க்,

ஆண்டின் கடைசி 'கிராண்ட்ஸ்லாம்' ஆன அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), ரஷியாவின் அனஸ்தேசியா உடன் மோதினார்.

இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-4 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் 4-வது சுற்று ஆட்டத்தில் லியுட்மிலா சாம்சோனோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்