நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா, சகநாட்டவரான அமண்டா அனிசிமோவாவை எதிர்கொள்ள உள்ளார்.;

Update:2024-08-12 23:33 IST

Image Courtesy: @NBOtoronto

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கைகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் டயானா ஷ்னைடரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா, சகநாட்டவரான அமண்டா அனிசிமோவாவை எதிர்கொள்ள உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்