மான்டி கார்லோ டென்னிஸ்: சின்னர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
சின்னர் 3-வது சுற்று ஆட்டத்தில் லெனார்ட் ஸ்ட்ரப் உடன் மோத உள்ளார்.;
மான்டி கார்லோ,
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியை சேர்ந்த சின்னர், அமெரிக்க வீரரான செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இவர் 3-வது சுற்று ஆட்டத்தில் லெனார்ட் ஸ்ட்ரப் உடன் மோத உள்ளார்.