இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ், அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் ரூப்லெவ், அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இத்தாலி,
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், ஸ்லோவாக்கியா வீரர் அலெக்ஸ் மோல்கனுடன் மோதினார். இந்த போட்டியில் ரூப்லெவ், 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மோல்கனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், சக நாட்டு வீரரான ஆல்பர்ட் ராமோசுடன் மோதினார். இந்த போட்டியில் அல்காரஸ், 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஆல்பர்ட்டை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.