இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்

Update: 2024-05-10 20:22 GMT

image courtesy: AFP

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரான ஜோகோவிச் ( செர்பியா), கோரெண்டின் மவுடெட் (பிரெஞ்சு) உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இவர் தனது அடுத்த சுற்று ஆட்டத்தில் அலெஜான்ட்ரோ டேபிலோ உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்