தர்மபுரி அருகே பாலத்தில் தூங்கிய போது தவறி விழுந்து தொழிலாளி சாவு

Update: 2023-02-24 18:45 GMT

தர்மபுரி:

சேலம் பெரிய புத்தூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 43). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் தர்மபுரி அருகே சோகத்தூரில் உள்ள ஒரு உர குடோனுக்கு மூட்டை தூக்கும் பணிக்கு வந்தார். அங்கு தங்கி பணியில் ஈடுபட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியை முடித்த பின் குமார், அருகே உள்ள சிறு பாலத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்