உலகின் அதிவேக மனிதர்
100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் 9.83 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
புடாபெஸ்ட்,
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த உலகின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் 9.83 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்றார். நடப்பு சாம்பியனான மற்றொரு அமெரிக்க வீரர் பிரெட் கெர்லி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்.