உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்

இந்திய பல்கலைக்கழக வீராங்கனை மானு பாகெர் 239.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

Update: 2023-07-29 19:04 GMT

செங்டு,

31-வது உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள செங்டு நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 119 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 2-வது நாளான நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இந்திய பல்கலைக்கழக வீராங்கனை மானு பாகெர் 239.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை இளவேனில் (252.5 புள்ளிகள்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் அணிகள் பிரிவில் மானு பாகெர், அப்ஹித்னா அசோக் பட்டீல், யாஷஸ்வினி சிங் தேஸ்வால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,714 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்