பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் சச்சின் கிலாரி தங்கம் வென்றார்
குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி தங்கம் வென்று அசத்தினார்
டோக்கியோ,
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் (F46 பிரிவு) போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி தங்கம் வென்று அசத்தினார். அவர் 16.30 மீட்டர் தூரத்திற்கு எறிந்தார்.இது ஆசிய சாதனையாகும்.இதற்கு முன்னதாக 16.21 மீட்டர் தூரம் வீசி ஆசிய சாதனையை இவர்தான் படைத்திருந்தார்.
இதன்மூலம் இந்தியா 11 பதக்கங்கள் பெறுள்ளது. இதில் ஐந்து தங்கப் பதக்கங்கள் அடங்கும். கடந்த முறை 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் வென்றிருந்தது. தற்போது இந்தியா அதைவிட அதிக பதக்கம் வென்றுள்ளது.