உபேர் கோப்பை பேட்மிண்டன்: சீன அணியிடம் இந்தியா தோல்வி

இந்திய அணியில் ஒற்றையர் ஆட்டங்களில் இஷா ராணி, தன்விர் ஷர்மா தோல்வி அடைந்தனர்.

Update: 2024-04-30 23:44 GMT

கோப்புப்படம் 

செங்டு,

பெண்களுக்கான 30-வது உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 15 முறை சாம்பியனான சீனாவை எதிர்கொண்டது.

முதல் 2 ஆட்டங்களில் கனடா, சிங்கப்பூர் அணிகளை அடுத்தடுத்து வென்று காலிறுதியை உறுதி செய்து இருந்த இந்திய அணி 0-4 என்ற கணக்கில் சீனாவிடம் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஒற்றையர் ஆட்டங்களில் இஷா ராணி, தன்விர் ஷர்மா தோல்வி அடைந்தனர்.

மற்றொரு வீராங்கனையான அன்மோல் கார்ப் கணுக்கால் காயம் காரணமாக பாதியில் விலகினார். இரட்டையர் ஆட்டங்களில் பிரியா கோன்ஜெங்பாம்-ஸ்ருதி மிஸ்ரா இணை, சிம்ரன் சிங் - ரித்திகா தாகெர் ஜோடி தோல்வி அடைந்தது. லீக் சுற்று முடிவில் இந்த பிரிவில் சீனா முதலிடமும், இந்தியா 2-வது இடமும் பிடித்தன.

Tags:    

மேலும் செய்திகள்