மத்தியபிரதேசத்தில் பரிதாபம்: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சாவு
எதிர்பாராதவிதமாக அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது.
விதிஷா,
மத்தியபிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தில் உள்ள கஜாரி பர்கேடா கிராமத்தில் நேற்று காலை 2 வயது பெண் குழந்தை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்தக்குழந்தை எதிர்பாராதவிதமாக அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார், அந்தப்பகுதிக்கு விரைந்து சென்று கடுமையான போராட்டத்திற்கு பிறகு குழந்தையை மீட்டனர். பின்னர் போலீசார் அந்தக்குழந்தையை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்தக்குழந்தை உயிரிழந்தது.