கோலாகலமாக தொடங்கிய பாராஒலிம்பிக்... ஜோதியை ஏந்தி சென்ற ஜாக்கி சான்

பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாக தொடங்கியது.

Update: 2024-08-29 03:20 GMT

image courtesy: twitter/@Paris2024

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கும் அதே பாரீசில் நடத்தப்படுகிறது. இதன்படி 17-வது பாராஒலிம்பிக் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை அரங்கேறும் இந்த போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

உடல் குறைபாட்டுக்கு ஏற்ப விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது. இதில் 22 விளையாட்டுகளில் 549 பந்தயங்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது.

இந்த பாராஒலிம்பிக் தொடரின் ஜோதியை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஏந்தி சென்றார். பாரீசின் முக்கிய பகுதியான லா கான்கோர்டு என்ற இடத்தில் இந்த தொடக்க விழா நடந்தது. இதில் 140 நடன கலைஞர்கள் பங்கேற்று கண்கவரும் நடனத்தில் ஈடுபட்டனர். இந்த தொடக்க விழாவில் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்கரான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மூலம் வண்ண புகைகள் வெளியேற்றி வானத்தில் வட்டமிட்டு படி சென்றது.

இந்தத் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை கடந்த டோக்கியோ பாராஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்ற சுமித் ஆண்டிலும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் என்ற பாக்கியஸ்ரீ ஜாதவும் ஏந்தி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்