ஆசிய விளையாட்டு: ஆக்கி போட்டியில் வங்காளதேசத்தை துவம்சம் செய்த இந்திய அணி
ஆசிய விளையாட்டு தொடரின் ஆக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஹங்சோவ்,
ஆக்கி ஆண்கள் முதல் நிலை குரூப் ஏ லீக் ஆட்டத்தில் இந்தியாவும் வங்காளதேசமும் மோதின. ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணி அபாரமாக விளையாடியது. கோல் மழை பொழிந்த இந்திய அணி , வங்காளதேசத்தை ஒரு கோல் கூட அடிக்க விடவில்லை. இதனால், இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடி வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.