ஆசிய விளையாட்டு போட்டி- இந்திய வீராங்கனை மீது சக வீராங்கனை குற்றச்சாட்டு
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை மீது சக வீராங்கனை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ஹாங்சோவ்,
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா இதுவரை 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
இந்தநிலையில், ஹெப்டத்லான் விளையாட்டில் 4-ம் இடம் பிடித்த தனக்கு வெண்கலம் பதக்கம் தர வேண்டும் என இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் கூறியுள்ளார்.
மகளிர் 800 மீ ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகசரா வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். வெண்கலம் வென்ற நந்தினி ஒரு திருநங்கை என்பதால் விதிப்படி எனக்குதான் பதக்கம் தர வேண்டும் என வீராங்கனை ஸ்வப்னா பர்மன் கூறியுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை மீது சக வீராங்கனை குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.