பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் - விவரம்

பாரீஸ், பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 27 பதக்கங்கள் வென்றுள்ளது,

Update: 2024-09-07 05:00 GMT

கோப்புப்படம் 

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த போட்டி தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-

பாரா சைக்கிள் ஓட்டுதல்:-

ஆண்கள் சி1-3 ரோட் ரேஸ் (இறுதிப் போட்டி - பதக்கச்சுற்று) - அர்ஷத் ஷேக் - மதியம் 1 மணி

பாரா சைக்கிள் ஓட்டுதல்:-

பெண்களுக்கான சி1-3 ரோட் ரேஸ் (இறுதிப் போட்டி - பதக்கச்சுற்று) - ஜோதி கதேரியா - மதியம் 1.05 மணி

பாரா கேனோ:-

ஆண்கள் கே.எல்.1 200மீ அரையிறுதி - யாஷ் குமார் - மதியம் 1.30 மணி

பாரா நீச்சல்:-

ஆண்கள் 50மீ பட்டர்பிளை எஸ்7 ஹீட்ஸ் - சுயாஷ் ஜாதவ் - மதியம் 1.55 மணி

பாரா கேனோ:-

மகளிர் வி.எல்.2 200மீ அரையிறுதி - பிராச்சி யாதவ் - மதியம் 1.58 மணி

பாரா கேனோ:-

ஆண்கள் கே.எல்1 200மீ (இறுதிப் போட்டி ஏ & பி - பதக்கச்சுற்று) (தகுதி பெற்றிருந்தால்) - யாஷ் குமார் - மதியம் 2.50 மணி

பாரா கேனோ:-

மகளிர் வி.எல்.2 200மீ (இறுதிப் போட்டி ஏ & பி - பதக்கச்சுற்று) (தகுதி பெற்றிருந்தால்) - பிராச்சி யாதவ் - மதியம் 3.14 மணி

பாரா நீச்சல்:-

ஆடவர் 50 மீ பட்டர்பிளை எஸ்7 (இறுதிப்போட்டி - பதக்கச்சுற்று) (தகுதி பெற்றிருந்தால்) - சுயாஷ் ஜாதவ் - இரவு 10.00 மணி

பாரா தடகளம்:-

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்.40, எப்.41 (இறுதிப் போட்டி - பதக்கச்சுற்று) - நவ்தீப் - இரவு 10.30 மணி

பாரா தடகளம்:-

பெண்களுக்கான 200மீ டி12 (இறுதிப் போட்டி - பதக்கச்சுற்று) - சிம்ரன் - இரவு 11.04 மணி

பாரா தடகளம்:-

ஆடவர் 400மீ டி47 (இறுதிப் போட்டி - பதக்கச்சுற்று) - திலீப் காவிட் - நள்ளிரவு 12.30 மணி (செப்டம்பர் 8)


Tags:    

மேலும் செய்திகள்