நார்வே செஸ் போட்டி: 9-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானா காருனாவை சந்தித்தார்.

Update: 2024-06-07 22:44 GMT

Image Courtesy: Twitter / @chesscom_in

ஸ்டாவன்ஞர்,

12-வது நார்வே செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவன்ஞர் நகரில் நடந்து வருகிறது. இதில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 10 சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை பட்டத்தை வெல்வர். இதன் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 9-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானா காருனாவை சந்தித்தார்.

இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா கிளாசிக்கல் ஆட்டத்தில் டிரா கண்டார். இதைத்தொடர்ந்து நடந்த அர்மாகேட்டன் முறையில் 46-வது காய் நகர்த்தலில் பிரக்ஞானந்தா, காருனாவிடம் பணிந்தார்.மற்ற ஆட்டங்களும் அர்மாகேட்டன் முறையில் முடிவடைந்தது. இதில் 5 முறை சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 46-வது காய் நகர்த்தலில் அலிரெஜாவையும் (பிரான்ஸ்), உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), அமெரிக்காவின் ஹிகரு நகமுராவையும் வீழ்த்தினர். 9-வது சுற்று முடிவில் கார்ல்சென் (16 புள்ளி) முதலிடமும், ஹிகரு நகமுரா (14½ புள்ளி) 2-வது இடமும், பிரக்ஞானந்தா (13 புள்ளி) 3-வது இடமும் வகிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்