நார்வே செஸ் போட்டி: 4-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை சந்தித்தார்.

Update: 2024-05-31 21:38 GMT

image courtesy: Norway Chess via ANI

ஸ்வாடன்ஞர்,

12-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்வாடன்ஞர் நகரில் நடந்து வருகிறது. இதில் தலா 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலா 2 முறை என மொத்தம் 10 சுற்றில் மோத வேண்டும். இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை சந்தித்தார். இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 86-வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 66-வது காய் நகர்த்தலில் பாபியானோ காருனாவை (அமெரிக்கா) தோற்கடித்தார். பிரான்ஸ் வீரர் அலிரெஜா 34-வது காய் நகர்த்தலில் உலக சாம்பியன் டிங் லிரெனுக்கு (சீனா) அதிர்ச்சி அளித்தார். 4-வது சுற்று முடிவில் ஹிகாரு நகமுரா 7 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். அலிரெஜா 6½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், மாக்னஸ் கார்ல்சென் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். முதலிடத்தில் இருந்த பிரக்ஞானந்தா (5½ புள்ளி) 4-வது இடத்துக்கு பின்தங்கினார்.

பெண்கள் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி 54-வது காய் நகர்த்தலில் சுவீடன் கிராண்ட்மாஸ்டர் பியா கிரம்லிங்கை தோற்கடித்தார். 6 சுற்றுகள் மிஞ்சி இருக்கும் நிலையில் வைஷாலி 8½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். உலக சாம்பியன் வென்ஜூன் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்