உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிக்கு எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை திவ்யா தேர்வு

உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டி சீனாவில் அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.;

Update:2023-06-27 03:54 IST
உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிக்கு எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை திவ்யா தேர்வு

சென்னை,

உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டி சீனாவில் அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் எம்.ஏ. (மனித வள மேம்பாடு) இரண்டாம் ஆண்டு படிக்கும் வீராங்கனை ஜெ.திவ்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய பந்தயங்களுக்கு தேர்வாகி இருக்கிறார். ஏழை மாணவியான திவ்யா இந்த போட்டிக்கு சென்று வர ஆகும் செலவுத் தொகையான ரூ.1 லட்சத்துக்கு 87 ஆயிரத்துக்கான காசோலையை எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி நிர்வாகம் சார்பில் அதன் செயலாளர் மனோஜ்குமார் சந்தாலியா, முதல்வர் அர்ச்சனா பிரசாத் ஆகியோர் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்