உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: பெல்கிரேடில் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி,
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி தேர்வுக்கான தகுதி போட்டி பாட்டியாவில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் அமன் ஷெராவத் (ரெயில்வே) அதிஷ் தோட்கரை வீழ்த்தி முதலிடம் பிடித்து உலகக் கோப்பை வாய்ப்பை உறுதி செய்தார்.
ஆகாஷ் தாஹியா (61 கிலோ), அனுஜ் குமார் (65 கிலோ), அபிமன்யு (70 கிலோ), நவீன் (74 கிலோ), சச்சின் மோர் (79 கிலோ), சந்தீப் சிங் (86 கிலோ), புத்விராஜ் பட்டீல் (92 கிலோ), சஹில் (97 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ) ஆகியோர் தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்து அணியில் இடத்தை உறுதிப்படுத்தினர். ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, தீபக் பூனியா ஆகியோர் இந்த தகுதி போட்டியில் கலந்து கொள்ளவில்லை.