ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய அணி தங்கம் வென்றது

இந்திய அணி 1,616 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது

Update: 2024-10-08 01:25 GMT

லிமா,

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பெரு தலைநகர் லிமாவில் நடந்தது. இதில் கடைசி நாளில் நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் தீபக் தலால் (545), கமல்ஜீத் (543), ராஜ் சந்திரா (528) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,616 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றது. அஜர்பைஜான் அணி வெள்ளிப்பதக்கமும், அர்மேனியா வெண்கலப்பதக்கமும் பெற்றது.

இதன் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் முகேஷ் (548 புள்ளி) வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பரிஷா குப்தா (540 புள்ளி) வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில் இந்தியா 13 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் முதலிடத்தை தனதாக்கியது. இத்தாலி 5 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என்று 13 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்