ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் குமார் ஜெனாவிற்கு மீண்டும் விசா

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2023-08-18 04:55 GMT

புது டெல்லி,

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கும் ஒடிசாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் குமார் ஜெனாவின் ஒரு மாத விசாவை ஹங்கேரி தூதரகம் கடந்த புதன்கிழமை ரத்து செய்தது. இதனால் அவர் உலக தடகளத்தில் பங்கேற்க முடியுமா? என்பது கேள்விக்குறியானது.

அவருக்கு உடனடியாக விசா வழங்க மத்திய வெளியுறவு அமைச்சகம் உதவ வேண்டும் என்று ஒலிம்பிக் சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சமுக வலைதளம் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஹங்கேரி தூதரகம் கிஷோர் குமார் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க இன்று நேரம் ஒதுக்கி இருக்கிறது. இதன் மூலம் அவருக்கு மீண்டும் விசா கிடைத்து உலக போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்