ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

Update: 2023-07-27 15:11 GMT

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சகநாட்டு வீரரான ஶ்ரீகாந்த் கிடாம்பியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரனாய் 19-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் காந்தா சுனேயமா உடன் மோதினார். இந்த போட்டியில் லக்சயா சென் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்