சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரருக்கு வெண்கலப்பதக்கம்
இந்திய வீரர் அஷூ, லிதுவேனியாவின் அடோமஸ் கிரிகாலினாசை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஜாக்ரெப்,
ஜாக்ரெப் ஓபன் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டி குரோஷியாவில் நடந்தது. இதில் நேற்று கிரிக்கோ ரோமன் பிரிவின் 67 கிலோ உடல் எடைப்பிரிவில் களம் புகுந்த இந்திய வீரர் அஷூ 5-0 என்ற கணக்கில் லிதுவேனியாவின் அடோமஸ் கிரிகாலினாசை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
முன்னதாக 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் செராவத் வெண்கலம் வென்று இருந்தார். சாஹர், சுஷ்மா சோகீன், மன்ஜீத், அங்கித் குலியா, நரிந்தர் சீமா, ரீத்திகா, கிரன் உள்ளிட்ட இந்தியர்கள் ஏமாற்றம் அளித்தனர்.