சர்வதேச பெண்கள் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் 'சாம்பியன்'

இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் 39-வது நகர்த்தலில் சக நாட்டு வீராங்கனை மோனிகா அக்‌ஷயாவை வீழ்த்தினார்.

Update: 2024-03-26 20:10 GMT

சென்னை,

தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆதரவுடன் சர்வதேச பெண்கள் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 12 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதன் கடைசி சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் 39-வது நகர்த்தலில் சக நாட்டு வீராங்கனை மோனிகா அக்ஷயாவை வீழ்த்தினார். இதன் மூலம் கொல்கத்தாவை சேர்ந்த மேரி ஆன் கோம்ஸ் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். டைபிரேக்கர் புள்ளி அடிப்படையில் மங்கோலியா வீராங்கனை எங்துல் அல்தான் உல்ஜி (7½ புள்ளி) 2-வது இடமும், இந்திய வீராங்கனை வேல்புலா சரயு (7½ புள்ளி) 3-வது இடமும் பெற்றனர்.

பரிசளிப்பு விழாவில் அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளர் தேவ் படேல் சிறப்பு விருந்தினராக வருகை தந்து பரிசுக்கோப்பையை வழங்கினார். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.2½ லட்சம், ரூ.1½ லட்சம், ரூ.1.30 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அகில இந்திய செஸ் சம்மேளன துணைத் தலைவர் ஆனந்தா, முன்னாள் துணைத்தலைவர் பாவேஷ் படேல், தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் ஸ்டீபன் பாலசாமி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்