காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 8-வது பதக்கம்: ஜூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் விஜய் குமார் யாதவ்

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் விஜய் குமார் யாதவ் ஜூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.

Update: 2022-08-01 18:05 GMT

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.ஒட்டுமொத்தமாக இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான (60 கிலோ) ஜூடோவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் விஜய் குமார் யாதவ் சைப்ரஸின் பெட்ரோஸ் கிறிஸ்டோடூலிடைசை சந்தித்தார். முன்னதாக விஜய் குமார் யாதவ் ஸ்காட்லாந்தின் டிலான் முன்ரோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் நுழைந்தார்.

இப்போட்டியில் விஜய் குமார் யாதவ் சைப்ரஸின் பெட்ரோஸ் கிறிஸ்டோடூலிடைசை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்