உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணிகள் தங்கப்பதக்கம் வென்றன
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 4) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
பாரீஸ்,
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 4) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் அபிஷேக் வர்மா, ஓஜாஸ் டியோடாலே, பிராத்மேஷ் ஜவ்கர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 236-232 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்க அணியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது.
இதேபோல் பெண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதி போட்டியில் ஜோதி சுரேகா வென்னம், அதிதி ஸ்வாமி, பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 234-233 என்ற புள்ளி கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.