சர்வதேச செஸ் போட்டி: ஆனந்துக்கு அதிர்ச்சி அளித்தார் குகேஷ்

சர்வதேச ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி குரோஷியாவில் உள்ள ஜாரெப் நகரில் நடந்து வருகிறது.

Update: 2023-07-09 00:26 GMT

கோப்புப்படம்

ஜாரெப்,

உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கிராண்ட் செஸ் டூரின் அங்கமான சூப்பர் யுனைடெட் சர்வதேச ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி குரோஷியாவில் உள்ள ஜாரெப் நகரில் நடந்து வருகிறது. இதில் ரேபிட் பிரிவின் 8-வது சுற்றில் சென்னையை சேர்ந்த 17 வயது கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ், 5 முறை உலக சாம்பியனான விசுவநாதன் ஆனந்தை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 40-வது காய் நகர்த்தலில் குகேஷ், ஆனந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். ஆனந்துக்கு எதிராக சர்வதேச போட்டியில் குகேஷ் பெற்ற முதல் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 'இது மிகவும் முக்கியமான வெற்றி, இந்த வெற்றி மிகுந்தமகிழ்ச்சியை அளிக்கிறது' என்று குகேஷ் வெற்றிக்கு பிறகு தெரிவித்தார்.

ரேபிட் பிரிவில் 9-வது மற்றும் கடைசி சுற்று முடிவில் ரஷியாவின் இயான் நெபோம்னியாசிட், அமெரிக்காவின் பாபியானோ கருணா தலா 6 புள்ளிகளுடனும், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 5½ புள்ளிகளுடனும் இந்தியாவின் ஆனந்த், குகேஷ் தலா 5 புள்ளிகளுடனும் முறையே முதல் 5 இடங்களில் உள்ளனர். இதைத்தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவு போட்டிகள் நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்