உடல் எடையை 50 கிலோவுக்குள் வைத்திருப்பது சவாலானது - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பேட்டி

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு. அதற்காக கடுமையாக உழைக்கிறேன் என்று வினேஷ் போகத் கூறினார்.

Update: 2024-04-21 22:37 GMT

வினேஷ் போகத் ( கோப்புப்படம் ANI)

பிஷ்கேக்,

ஒலிம்பிக் மல்யுத்தத்திற்கான ஆசிய மண்டல தகுதி சுற்று கிர்கிஸ்தானில் 3 நாட்கள் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார். 3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வினேஷ் போகத், காமன்வெல்த் போட்டியில் 'ஹாட்ரிக்' பட்டம் வென்றவர் ஆவார்.

29 வயதான வினேஷ் போகத் நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'வேறு வழியில்லாததால் தான், நான் 53-ல் இருந்து 50 கிலோ எடைபிரிவுக்கு மாற வேண்டியதாகி விட்டது. ஆனால் இப்போது 50 கிலோ பிரிவில் ஒலிம்பிக் கோட்டாவை உறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி உடல் எடையை 50 கிலோவுக்குள் தொடர்ந்து வைத்தாக வேண்டும். நீண்ட காலத்திற்கு பிறகு எடையை 50-க்குள் குறைத்துள்ளேன். முடிந்த அளவுக்கு இதை சீராக வைத்திருக்க முயற்சிப்பேன்.

ஆனால் அதே எடையை தொடர்ந்து வைத்துக்கொள்வது மிகவும் சவாலானது. ஏனெனில் எனது தசைபலம் மிகவும் வலிமையானது. அதனால் என்னால் எடையை எளிதாக அதிகரிக்க முடியும். பாரீஸ் ஒலிம்பிக்குக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. அதுவரை ஒவ்வொரு நாளும் முக்கியமானது. 20 ஆண்டுகளாக மல்யுத்தத்தில் இருக்கிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு. அதற்காக கடுமையாக உழைக்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்