டென்மார்க், பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில் இருந்து பிரனாய் காயத்தால் விலகல்
டென்மார்க், பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில் இருந்து காயத்தால் பிரனாய் விலகியுள்ளார்.;
ஓடென்ஸ்,
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஓடென்ஸ் நகரில் இன்று முதல் 22-ந் தேதி வரையும், பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் நடக்கிறது. இந்த இரண்டு போட்டியில் இருந்தும் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் 31 வயது இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் விலகி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் முதுகு வலியுடன் ஆடி ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற பிரனாய் காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை எட்டுவதற்கு 2-3 வாரம் பிடிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவர் இந்த போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.