செஸ் ஒலிம்பியாட்; தொடர் பயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் தங்கப் பதக்கம்...குகேஷ் பேட்டி

ஹங்கேரி நாட்டிலிருந்து கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இன்று தாயகம் திரும்பினார் .

Update: 2024-09-24 09:32 GMT

Image : PTI

சென்னை,

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்தது. இதில்இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணியினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வெல்ல சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில், ஹங்கேரி நாட்டிலிருந்து இன்று தாயகம் திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்-க்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குகேஷ் கூறியதாவது ,

ஆண்கள், பெண்கள் என இரண்டு அணிகளும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது சிறப்பான தருணம். ஒலிம்பியாட் போட்டிகளில் அதிக முறை தோல்விகளை சந்தித்திருக்கிறோம். சென்னையில் நடந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளோம். தொடர் பயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இந்த தங்கப் பதக்கம். இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்ததுதான் இந்த தங்கப் பதக்கம்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்