உலக பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் உறுதி!

இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Update: 2022-08-26 05:04 GMT

டோக்கியோ,

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு தகுதி பெறும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில், உலக சாம்பியன்களான ஜப்பானின் டகுரோ ஹோக்கி மற்றும் யூகோ கோபயாஷியை 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி பெற்றுள்ளனர்.

மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், இந்தோனேசியாவின் ஹென்ட்ரா செட்டிவா மற்றும் முகமது அஹ்சன் ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்தியாவின் எம் ஆர் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா இணை, 8-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்