ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்கு திரும்பினார் பி.வி.சிந்து..!

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Update: 2024-01-10 02:34 GMT

Image Courtesy: @Media_SAI / கோப்புப்படம்

புதுடெல்லி,

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மலேசியாவில் உள்ள ஷா ஆலம் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து இடம் பெற்றுள்ளார். முழங்கால் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வி இருந்த பி.வி.சிந்து எந்தவித சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை.தற்போது முழு உடற்தகுதியை அடைந்ததால் ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தொடர் இந்தியவீரர், வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மலேசிய போட்டியின் வாயிலாக கணிசமான புள்ளிகளை பெற முடியும்.

மகளிர் அணியில் சிந்துவுடன் அன்மோல் கார்ப், தன்வி சர்மா, அஷ்மிதா சாலிஹா ஆகியோரும் ஒற்றையர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் எச்.எஸ்.பிரனோய் அணியை வழிநடத்த உள்ளார். லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஷிராக் சென் ஆகியோரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்க உள்ளனர்.

இந்திய அணி விவரம்; ஆண்கள் அணி: ஹெச்.எஸ்.பிரனோய், லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஷிராக் சென், சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர்.அர்ஜூன், சூரஜ் கோலா, பிருத்வி ராய்.

பெண்கள் அணி; பி.வி.சிந்து, அன்மோல் கர்ப், தன்வி சர்மா, அஷ்மிதா சாலிஹா, ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ, பிரியா தேவி கொஞ்செங்பம், ஸ்ருதி மிஸ்ரா.


Tags:    

மேலும் செய்திகள்