பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்...!
பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளது.;
பிஜீங்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 5வது நாளான இன்று இந்தியா பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில், பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளது. பெண்கள் காம்பவுண்ட் ஒபன் வில்வித்தை மற்றும் ஆண்கள் 1500 மீட்டர் டி38 ஓட்டம் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றனர்.
பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இதுவரை 21 தங்கம், 26 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தம் 90 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 5 ம் இடத்தில் உள்ளது.