லைவ்: ஆசிய விளையாட்டு - 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா
தடகளம்:
தடகளம் பெண்கள் 100 மீட்டர் ஹர்டில்ஸ் தகுதி சுற்று போட்டியில் 5ம் இடம் பிடித்த இந்தியாவின் நித்யா ராம்ராஜ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
துப்பாக்கி சுடுதல்:
துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு தகுதி சுற்று போட்டியில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவின் சரப்ஜோத் சிங், திவ்யா இணை 577 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தடகளம்:
தடகளம் ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் முதல் முயற்சியிலேயே 7.97 மீட்டர் தாண்டினார். 7.90 மீட்டர் தாண்டினாலே இறுதிப்போட்டிக்கு தகுதியாகலாம் என்பதால் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதல் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.
தடகளம்:
தடகளம் பெண்கள் ஹப்தலொன் 100 மீட்டர் ஹர்டில்ஸ் - ஹீட் தகுதி சுற்று போட்டியில் 2ம் இடம் பிடித்த இந்திய வீராங்கனை ஜோதி யராஜி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இதனிடையே, ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் 8ம் நாளான இன்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.