துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரமிதா, பன்வார் ஆகியோர் கொண்ட கலப்பு அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதிபெற்றது. எனினும் இதில் கொரிய அணியிடம் 18-20 என்ற கணக்கில் தோல்வி அடைந்து பதக்கம் பெறும் வாய்ப்பை பறிகொடுத்தது.
வாள் வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி, சீன வீராங்கனையிடம் தோற்று காலிறுதியில் இருந்து வெளியேறினார்.
வாள் வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி காலிறுதிக்கு தகுதி
ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் வாள் வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். குரூப் பிரிவில் நடந்த 6 போட்டிகளிலும் வென்ற நிலையில் காலிறுதி சுற்றுக்கு பவானி தேவி முன்னேறினார்.
ஸ்குவாஷ் பிரிவில் இந்திய பெண்கள் அணி 3-0 பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது இந்தியா
ஹாங்சோவ்,
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியும் இந்திய அணியும் மோதின. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 16-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது
ஹாக்கி: சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 11-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஹாக்கி: சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் இந்தியா ஆதிக்கம்
ஆடவர் ஹாக்கி போட்டி: சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அசத்தி வருகிறது. முதல் பாதியில் 6-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இரண்டாவது பாதியிலும் இந்தியா ஒரு கோலை அடித்தது. பெனால்டி வாய்ப்பில் இந்தியாவின் ஹர்ம்பன்பிரித் சிங் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தினர். இந்தியா தற்போது 7-0 என முன்னிலை வகிக்கிறது
வாள் வீச்சு போட்டி: வாள் வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி வங்காளதேசத்தின் ரோக்ஷனா கதுன் - ஐ 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாக்கி போட்டி: சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பாதி முடிவில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷ் மற்றும் ரமிதா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.