ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றார் லவ்லினா

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவில் இந்தியா 4 தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றுள்ளது.

Update: 2022-11-11 15:42 GMT

Image Tweeted By BFI_official

ஜோர்டான்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிக்கு 12 இந்திய வீரர், வீராங்கனைகள் முன்னேறி இருந்ததால் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் (குறைந்தது வெண்கலப் பதக்கம்) உறுதியாகி இருந்தன.

நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான அரையிறுதி போட்டியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ (75 கிலோ) தோல்வி அடைந்து வெண்கல பதக்கம் வென்று இருந்தார். இதில் லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) கொரிய குடியரசின் சியோங் சுயோனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று நடந்த இறுதி போட்டியில் லவ்லினா 5-0 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சோகிபாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அதே போல் இந்தியாவின் பர்வீன் (63 கிலோ எடை பிரிவு) ஜப்பானின் கிட்டோ மாய்யை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தியாவின் சாவீட்டி (81 கிலோ) மற்றும் அல்பியா பதான் (81+ கிலோ) ஆகியோரும் இறுதி போட்டியில் வெற்றி`பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவில் 4 தங்கம் உட்பட இந்தியா 7 பதக்கங்களை வென்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்