ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் பி.வி. சிந்து , பிரனாய் தோல்வி
ஹெச்.எஸ். பிரனாய் உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் லின் சுன்-யியை எதிர்கொண்டார்
நிங்போ,
ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் .இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஹெச்.எஸ். பிரனாய் உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் லின் சுன்-யியை எதிர்கொண்டார். இதில் பிரனாய் 18-21, 11-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஹாய் யுயி-ஐ 2-வது சுற்றில் எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து முதல் செட்டை 18-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றினார்.வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் கடுமையாக போராடினார். இருந்தபோதிலும் 17-21 என 3-வது செட்டை தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.