110 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2023-04-22 19:06 GMT

கோப்புப்படம் 

சென்னை,

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 17-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி வரை நடக்கிறது.

அரைஸ் பவுண்டேசன், காளீஸ்வரி பயர்ஒர்க்ஸ், எம்.ஓ.பி.வைஷ்ணவா ஆகியவை ஆதரவுடன் அரங்கேறும் இந்த போட்டி தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடல் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, ஜே.ஐ.டி., தமிழ்நாடு போலீஸ், எஸ்.டி.ஏ.டி. லயோலா உள்பட 80 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 30 அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டியில் இரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தகவலை ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப்பின் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்