உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற நியூஜெர்சி
அடுத்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ளது.
நியூஜெர்சி,
பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி அடுத்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் நடத்துகின்றன. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற நியூஜெர்சி- டெக்சாஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் நியூஜெர்சி இறுதி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது.
மெக்சிகோவில் ஜூன் 11-ந்தேதி உலகக்கோப்பை தொடர் தொடங்கி, ஜூலை 19-ந்தேதி நியூஜெர்சியில் முடிவடைகிறது. மொத்தம் 16 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது.