உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா - வெனிசுலா ஆட்டம் 'டிரா'

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடின

Update: 2024-10-12 03:53 GMT

Image : AFP 

மட்ரின்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும்.

தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன. இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி , வெனிசுலா அணியுடன் மோதியது .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடின . இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது . அர்ஜென்டினா அணியில் நிக்கோலஸ் ஒட்டமெண்டி கோல் அடித்தார். வெனிசுலா அணியில் சாலமன் ரேண்டன் கோல் அடித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்