பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து; காலிறுதி போட்டிகள் 11ஆம் தேதி தொடக்கம்

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் 11ஆம் தேதி நடைபெற உள்ளன.

Update: 2023-08-09 10:38 GMT

image courtesy; twitter/@FIFAWWC

வெலிங்டன்,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட 32 அணிகளில் இருந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 2-வது சுற்றுக்கு (நாக் அவுட்) முன்னேறின. 2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தன. இதன் முடிவில் ஸ்பெயின், ஜப்பான், நெதர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடரில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால் இறுதி ஆட்டங்கள் 11ஆம் தேதி தொடங்குகின்றன. அன்று நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நெதர்லாந்து மற்றும் ஜப்பான்-சுவீடன் அணிகள் மோதுகின்றன. 12ஆம் தேதி நடைபெறும் கால் இறுதி போட்டிகளில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதுகின்றன. அரை இறுதி போட்டிகள் 15 மற்றும் 16-ஆம் தேதிகளிலும், இறுதி போட்டி 20-ஆம் தேதியும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்