சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உருகுவே வீரர் சுவாரஸ் அறிவிப்பு

சுவாரஸ் உருகுவே அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையையம் பெற்றுள்ளார்.;

Update:2024-09-03 15:49 IST

Image : AFP 

சென்னை,

உருகுவே கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 6ம் தேதி நடைபெற உள்ள பராகுவேக்கு எதிரான 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சுவாரஸ் அறிவித்துள்ளார்.

142 போட்டிகளில் விளையாடி 69 கோல்களை அடித்துள்ள சுவாரஸ் உருகுவே அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையையம் பெற்றுள்ளார்.

சுவாரஸ் கிளப் போட்டிகளில் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் மெஸ்சியுடன் இணைந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்