ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடக்கம்
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது
பெர்லின்,
உலகக்கோப்பை கால்பந்துக்கு அடுத்து பிரபலம் பெற்றது ஐரோப்பிய கோப்பை தொடர் (யூரோ). ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் கடைசியாக 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது. ஜூலை 14 வரை 1 மாதகாலத்துக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.
நாளைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.26-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. 29-ந் தேதி நாக் அவுட் சுற்று தொடங்குகிறது. ஜூலை 9 மற்றும் 10-ந் தேதிகளில் அரைஇறுதி ஆட்டங்களும், இறுதிப் போட்டி ஜூலை 14-ந் தேதியும் நடக்கிறது இதனால் கால்பந்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.