ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதி பிரான்சை வீழ்த்திய ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.;

Update: 2024-07-09 23:33 GMT

முனிச்,

17வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை இத்தொடரில் நேற்று இரவு நடந்த அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின் - பிரான்ஸ் மோதின.

ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்திலேயே பிரான்சின் ரன்டல் முனெய் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து, ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் யமல் மற்றும் 25வது நிடமிடத்தில் டனியும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இதையடுத்து, ஆட்டத்தில் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்